நீலகிரி மாவட்டம், உதகையில் சாலையில் சுற்றித் திரிந்த காட்டெருமையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் காப் கிளப் சாலையில் இரு காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன.
அதில் காயமடைந்த காட்டெருமை ஒன்று சாலையில் சிரமப்பட்டு நடந்து சென்றது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கினர்.
காயமடைந்த காட்டெருமையை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.