கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2 ஆவது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டாவை வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இது ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், ஜோகோவிச் 3-வது சுற்றை எட்டுவது 75-வது முறையாகும். இதன் மூலம் 74 முறை மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் பெடரர் சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளார்.