கோவையில் இளைஞர் ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்த கௌதம் என்பவரும், அமெரிக்காவை சேர்ந்த சாரா என்பவரும் கல்லூரியில் பயின்றபோது ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர்.
இவர்கள் திருமணம் செய்து கொள்ள எண்ணிய நிலையில், அதற்கு அவர்களது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கத்தில் கௌதம் – சாரா ஜோடியின் திருமணம் தமிழ்முறைப்படி நடைபெற்றது.
இதில் அமெரிக்க மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.