அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளை எதிர்த்துப் போராட சீனா, இந்தியாவிடம் உதவி கோரியது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார்.
இந்நிலையில் வரி விதிப்பு குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த மார்ச் மாதமே குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் குறித்த தகவல்கள் 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது வெளிவந்துள்ளன.
கடிதத்தில், வர்த்தகப் போரில் அமெரிக்காவிற்கு எதிராக வலுவாகப் போராட இந்தியாவின் ஆதரவு தேவை என ஜின்பிங் கோரியுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் ஜி ஜின்பிங் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பின் மூலம் அமெரிக்கா தெற்காசியாவின் பழமையான நண்பரை இழந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் டிரம்பின்தவறான நடவடிக்கையால் சீனாவும், இந்தியாவும் வர்த்தகத்தைத் தொடங்குவதை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.