இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!
Sep 5, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 09:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகத் தொடக்கம் முதலே ஜப்பான் இருந்து வருகிறது. இரு நாடுகளும் வர்த்தக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நெருங்கித் தொடர்பு கொண்டுள்ளன. இந்நிலையில், இரு நாடுகளின் நட்புறவு குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ‘குவாட்’ அமைப்பின் எதிர்காலம், பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்டவைத் தொடர்பாக விவாதிக்க மோடி ஜப்பான் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமராகப் பதவியேற்ற பின் பிரதமர் மோடி ஜப்பானுக்குச் செல்வது இது 8வது முறையாகும்.

அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்குப் பின்னான மோடியின் இந்த ஜப்பான் பயணம், இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் நெருங்கிய உறவு இருந்து வருகிறது. கி.பி. 6ம் நூற்றாண்டில் பௌத்தம் ஜப்பானில் அறிமுகமானது முதல் இந்த உறவு தொடங்குகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், பௌத்தம் வாயிலாக இந்திய கலாச்சாரம் ஜப்பானிய கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜப்பான் மக்கள் இந்தியாவுடன் மிகுந்த நட்புடன் இருப்பதற்கு இது முக்கிய காரணம் எனவும் அவர்க் கூறியுள்ளார்.

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில் இந்தியாவும் ஜப்பானும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதற்கு உதாரணமாக, ஜப்பானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக “நமஸ்தே இந்தியா” விழா நடைபெற்று வருகிறது.

வர்த்த ரீதியிலும் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக ஜப்பான் இருந்து வருகிறது. இந்தியாவுடன் அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 17ஆவது இடத்திலும், ஜப்பானுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளில் இந்தியா 18ஆவது இடத்திலும் உள்ளன.

2024-25வது நிதியாண்டில் மட்டும் இந்தியா ஜப்பானுடன் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதில், ஏற்றுமதி 45 ஆயிரம் கோடி ரூபாயாகவும், இறக்குமதி ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உள்ளது.

2015ஆம் ஆண்டு மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையில் புல்லட் ரயில் பாதையை உருவாக்க இந்தியாவும் ஜப்பானும் ஒப்பந்தமிட்டன.

அதேபோல, 2021ம் ஆண்டு 5G-ஐ மையமாகக் கொண்ட தகவல் தொடர்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2022ம் ஆண்டு டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியாவில் 42 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இப்படி, வர்த்தகம் மற்றும் கலாச்சார ரீதியில் இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக ஜப்பான் இருந்து வருகிறது. மோடியின் இந்தப் பயணம் மூலம் இந்த நட்புறவு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Japan is a friendly country of Indiapm modi visit jappan
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

Next Post

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies