செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!
Sep 13, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. சேவைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, தற்போது உலகளாவிய உற்பத்தி மையமாகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2014ம் ஆண்டு முதல்முறையாக நாட்டின் பிரதமரான பிரதமர் மோடி, இந்தியாவில் உற்பத்தி செய், உலகத்துக்கு விற்பனைச் செய் என்ற இலக்கை முன்வைத்தார். உள்நாட்டில் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவித்த மத்திய அரசு, உள்ளூர்  பொருட்களுக்கு ஆதரவு மற்றும் உலகுக்கான உள்ளூர்  பொருட்கள் என்ற உத்திகள் நல்ல பலனை அளித்துள்ளன. இப்பொது உலகமெங்கும் இந்தியப் பொருட்களின் இருப்பைக் காண முடிகிறது.

செமி கண்டக்டர் முதல் விமானம்தாங்கிப் போர்க் கப்பல் வரை உலகம் விரும்பும் உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது. வளர்ந்து வரும் போட்டித்திறன், உலகச் சந்தையில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு, திறமையான பணியாளர்கள், சாதகமான வணிகச் சூழல் போன்றவற்றால் இந்தியாவின் உற்பத்தித் துறைக் கடந்த 11 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது.

ஆயுஷ் பொருட்களும், யோகாவும் உலகம் முழுவதும் சென்றுள்ளன. உலகின் மஞ்சள் தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியாவே வழங்குகிறது. காபி ஏற்றுமதியில் உலகின் 7வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. மின்னணு பொருட்கள் முதல் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரைப் பல்வேறு துறைகளிலும் இந்திய உலகளாவிய உற்பத்தி மையமாக மாறியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி 265 மில்லியன் டன்னாக இருந்தது. இப்போது 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பருப்பு,கரும்பு எனச் சுமார் 2900க்கும் மேற்பட்ட புதிய ரகங்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி 500 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தி 2,700 மடங்கும், பாதுகாப்பு தளவாட உற்பத்தி 200 மடங்கும் அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், உலகளாவிய உற்பத்தி இடர்  குறியீட்டில் மூன்றாவது இடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், முதல் இடத்தில் சீனாவும் இருந்தன. இப்போது அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்திக்கான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2028 வரை 4.36 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2035ம் ஆண்டுக்குள் இந்தியா 2,13,925 கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை எட்டும் என்று நிதி ஆயோக்கின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

ஆத்மநிர்பர்  பாரத், தொழில்துறைத் தாழ்வார மேம்பாடு, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள், ஸ்டார்ட்அப் இந்தியா, திறன் இந்தியா, சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தியாளர்களுக்கான கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம், தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் (NIMZs),ஊக்கத் தொகையுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி திட்டம், தேசிய உற்பத்தி கொள்கை,தேசிய மூலதனப் பொருட்கள் கொள்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மத்திய அரசு நாட்டின் உற்பத்திக்கு ஊக்கமளித்து வருகிறது.

2030ம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்க்கும் திறனை இந்தியாவின் உற்பத்தித் துறை கொண்டிருக்கும் என்று வணிக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சீனாவின் +1 திட்டத்துக்கு மாற்றாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியவைத் தங்கள் முதலீட்டுத் தளமாக ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்கேற்ப, ரஷ்யா,சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் ஆசியான் போன்ற 50-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்தி உள்ளது.

முதலீட்டை ஈர்த்தல், நவீனமயமாக்குதல், சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல் என்று 2014 ஆம் ஆண்டு தொடங்கிய முயற்சியால், இன்றைக்கு உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது.

Tags: ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்புIndiaFrom semiconductors to warships: India is a global manufacturing hubஉலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியாசெமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

Next Post

இந்தியா, ஜப்பான் இடையே சிறு, நடுத்தர மற்றும் தொடக்க நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் – பிரதமர் மோடி உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies