டோக்கியோவில் இந்திய தேசிய கொடி நிறத்தில் Skytree கோபுரம் மிளிர்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 634 மீட்டர் கொண்ட Skytree கோபுரம் உள்ளது. இது ஜப்பானின் மிக உயரமான கோபுரமாகவும், உலகில் இரண்டாவது உயரமான கட்டிடமாகவும் உள்ளது.
2012 இல் திறக்கப்பட்ட இந்த கோபுரம், ஜப்பானின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இத்தகையை பெருமைமிக்க கட்டிடம் இந்திய தேசிய கொடி நிறத்தில் மிளிர்ந்தது கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது.