ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் சீனாவை இந்திய அணி வீழ்த்தியது.
ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீகாரின் ராஜ்கிர் நகரில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, இந்தியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இந்திய அணி, தனது 2வது போட்டியில் ஜப்பானை வரும் 31ஆம் தேதி சந்திக்கிறது.