மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், தமாகா நிறுவனருமான மூப்பனாரின் நினைவு தினம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பனர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, தமாகா சார்பில் மூப்பானருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து மூப்பனாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.