மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள இல்லத்தில் திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இல.கணேசன் கடந்த 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இல.கணேசனின் இல்லத்திற்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கவுன்சிலர் உமா ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.