ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காரைக்குடி நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் பாசின் பழனியப்ப செட்டியார் வீடு என்ற புகழ்பெற்ற வீட்டில், அதன் பங்குதாரர் சின்ன கருப்பையா, மலையாளத்துப் பெண்ணை மணந்துகொண்ட கரு. பழனியப்பன் என்கிற தன்னுடைய மகனுக்குத் தனது பங்கை இனாம் செட்டில்மெண்ட் எழுதி வைத்தார்.
சின்ன ஆறுமுகத்தின் 25 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் ஆகி விடுதலை எழுதிக் கொடுத்த விட்ட வெளியேறிய அந்த மகனை கரு பழனியப்பன் இழுத்து வந்து அவனை முன்னிறுத்தி இந்த குழப்பங்களை செய்கிறார் கரு. பழனியப்பன் ஒரு திமுககாரர், புதிதாக இந்த வீட்டில் கிடைத்திருக்கின்ற உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற பங்குதாரர்களை நெருக்கடி செய்வது அவருடைய வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த வீட்டில் ஒரு பங்குதாரர் ஆகிய சின்ன ஆறுமுகத்தையும் மற்ற பங்குதாரர்களையும் நெருக்கடி செய்யும் வகையில் பலபேருக்கு உரிமையான வேல்பூசை நடத்துகின்ற இந்தப் பொது வீட்டில் 31-08-2025 ஞாயிறு அன்று காலை 9 மணியிலிருந்து பிற்பகல்வரை மதநல்லிணக்கம் என்ற பெயரில் மிலாது நபி விழாவைக் கொண்டாடுவதற்கு நிதித்துறை மந்திரி தங்கம் தென்னரசு வருகிறார்.
மூன்று மௌல்விகள் குரான் ஓதுவதற்கு வருகிறார்கள். அந்த வீட்டிலேயே தொழுகையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, எந்த வம்புக்கும் போகாத நகரத்தார்களின் வீடுகளில் தன்னுடைய திமுக முஸ்லிம் ஆதரவுக் கொள்கையைத் திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தைப் புண்படுத்தாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
கரு பழனியப்பனும், மந்திரி தங்கம் தென்னரசுவும், காரைக்குடி மேயர் முத்துத்துரையும், சின்ன ஆறுமுகம் கொடுத்த போலீஸ் புகாரை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்கள்
ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது இந்த ஆட்சியின் பொதுவான போக்கு ஆகும், இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.