தமிழ், தமிழ் கலாசாரம் என்று திரும்ப திரும்ப பேசுபவர்கள், தமிழர் பிரதமராக வேண்டிய தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னைத் தேனாம்பேட்டையில் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்,
மத்திய அமைச்சர், மூப்பனார் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர், நாடு முழுவதும் அவருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்ததாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
அத்தகைய தமிழ் தலைவரான மூப்பனார்ப் பிரதமர் ஆக சந்தர்ப்பம் இருந்தத்தைத் தமிழ் தமிழ் எனப் பேசுபவர்கள் பிரதமர் ஆக விடாமல் தடுத்துத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
மது, போதைப் பழக்கம் அதிகரித்துள்ள தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்தார்.
தமிழ் தமிழ் என்று பேசி வருபவர்கள் தான் மறைந்த தலைவர் மூப்பனாரை பிரதமராக ஆக விடாமல் தடுத்துத் துரோகம் செய்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விமர்சனம் செய்துள்ளார்.