நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு உள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025’ன் பட்டியலைத் தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசைப் பட்டியலிடப்பட்டது.
பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்தக் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு உள்ள நகரமாகப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாகப் பெண்கள் கூறி உள்ளனர். மேலும், விசாகப்பட்டினம், புவனேஸ்வர், காங்டாக், இட்டாநகர் மற்றும் மும்பை ஆகியவைப் பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் பாட்னா, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி ஆகியவை மிகக் குறைந்த பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகக் கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீதப் பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.