அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கத்தியை சுழற்றி அட்டகாசம் செய்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto.com அரங்கம் அருகே குர்பிரீத் சிங் என்ற நபர், அவ்வழியாக வந்த காரை நிறுத்தி கத்தியை சுழற்றி அட்டகாசம் செய்துள்ளார்.இதுதொடர்பாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்த நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், ஆயுதத்தைக் கீழே போடுமாறு சிங்கிற்குப் பலமுறை கட்டளையிட்டனர். ஆனால் போலீசாரின் கட்டளையை மதிக்காமல் கத்தியால் தாக்கிவிட்டுத் தண்ணீர் பாட்டிலையும் போலீசார் மீது வீசி எறிந்தார்.
இதையடுத்துக் குர்பிரீத் சிங் தனது காரில் தப்பிச்சென்ற நிலையில் அவரை துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.