பல்லடம் அருகே உள்ள அரசு பள்ளிக்கு, தாய் மாமன் சீர்வரிசைக் கொண்டு செல்வதுபோல மேளத் தாளத்துடன் கல்வி உபகரணப் பொருட்களைப் பெற்றோர் எடுத்துச் சென்று வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காளிநாதன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 242 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், பள்ளிக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே முன்னின்று வாங்கிக் கொடுப்பதாக பெற்றோர்த் தெரிவித்தனர்.
அதன்படி, தொழில் முனைவோர், தன்னார்வலர்களின் உதவியுடன் வாங்கிச் சேரித்து வைத்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெற்றோர்கள் வழங்கினர்.
பின்னர், பள்ளிக்கான தேவையான பொருட்களைக் கொடுத்து உதவிய பெற்றோர், தன்னார்வலர்களுக்குப் பள்ளியின் முன்னாள் பொறுப்பு தலைமை ஆசிரியர் பத்மாவதி மற்றும் தற்போதைய பொறுப்பு தலைமையாசிரியர் மேகநாதன் ஆகியோர் நன்றித் தெரிவித்து கொண்டனர்.