ஐபிஎல் போட்டியின் போது, ஹர்பஜன் சிங், ஸ்ரீ சாந்தைக் கன்னத்தில் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடிக்கு ஸ்ரீ சாந்தின் மனைவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2008 ஐபிஎல் போட்டியின்போது மும்பை அணியில் விளையாடிய ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்தார்.
இது குறித்த வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி வெளியிட்டார். இதற்கு ஸ்ரீ சாந்தின் மனைவி புவனேஷ்வரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லலித் மோடி, மைக்கேல் கிளார்க்கின் செயல்கள் மிகவும் கேவலமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
18 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை மலிவான விளம்பரத்திற்காக, வெளியிட்டுள்ள நீங்கள் மனிதர்கள் தானா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இருந்து ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் இருவருமே மீண்டு வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், லலித் மோடி செய்தது அருவருக்கத்தக்க, இதயமே இல்லாத, மனிதாபிமானமற்ற செயல் என வேதனைத் தெரிவித்துள்ளார்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் வருவதைப் பார்க்க வலி மிகுந்ததாக இருப்பதாகப் புவனேஷ்வரி வேதனைத் தெரிவித்துள்ளார்.