பெங்களூருவில் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இயந்திரம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக நாள்தோறும் பல கண்டுபிடிப்புகள் நம்மைச் சுற்றி உலா வருகின்றன.
அந்த வகையில் தங்கள் இல்லங்களில் சேரும் குப்பைக் கழிவுகளை உரமாக மாற்றும் இயந்திரம் கவனம் பெற்றுள்ளது.
பெருநகரங்களில் மலைபோல் குவியும் குப்பைகளைக் கையாள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நவீன இயந்திரம் அதற்குத் தீர்வளிக்கும் என நம்பப்படுகிறது.
அன்றாடம் வீட்டில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை இந்த இயந்திரம் சில மணிகளில் உரமாக மாற்றுகிறது.
Chewie எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தைப் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா பகிர்ந்துள்ளார்.
மேலும் பெங்களூரு போன்ற நெரிசல் மிகுந்த நகரத்தில் இதன் தேவை அவசியம் என்றும் கிரண் மஜும்தார்-ஷா குறிப்பிட்டுள்ளார்.