முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் - வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 31, 2025, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்?  என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம்.

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.

காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் ₹7.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்! மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அவர்கள், டாவோஸ் பயணத்தில் ₹15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ₹6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

மூன்று வருடங்கள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை! சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் நிலுவையில் உள்ளன.

மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை! 2024-இன் அமெரிக்கப் பயணத்தில் ₹7,500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும்.

இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன் கேள்விChief Minister's foreign trips - When will the white paper be released? - Nainar Nagendran questionsமுதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்
ShareTweetSendShare
Previous Post

வடசென்னை 2 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

Next Post

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

Related News

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies