2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் போது அறநிலையத்துறையே இருக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான கோயில்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன என்றும், 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் போது அறநிலையத்துறையே இருக்காது என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு பயணங்களில் ஈர்த்த முதலீடு குறித்து முதலமைச்சர் இதுவரை வெள்ளை அறிக்கை வழங்கவில்லையே என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.