சேலம் ராமகிருஷ்ணர் கோயிலில் 105 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சேலத்தில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் ராமகிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 105 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா தொடங்கியது.
2ம் நாளான இன்று கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. பின்னர் கோயில் கோபுரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.
இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.