ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்து தாமதமாக வருவதால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தேனியில் இருந்து வரும் அரசுப் பேருந்து அடைக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பள்ளி நேரத்திற்குள் வராமல் தாமதமாக வருகிறது. இதனால் பள்ளிக்கு மாணவ மாணவிகள் தாமதமாக செல்வதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாணவர்களும், பெற்றோரும் கானாவிலக்கு – வருசநாடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கண்டமனூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.