சென்னை அம்பத்தூர் சிட்கோ சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
சென்னையின் முக்கிய நகரமான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததால் ஏராளமான வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.