வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் கூட்டமின்றி காணப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதுநாள் வரை மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் இன்று ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளி மாநில பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.