பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்த செயல்படுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடக்கும் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் தியான்ஜின் நகருக்கு வருகை தந்தார். பின்னர் பேசிய ரஷ்ய அதிபர் புதின், பிரிக்ஸ் அமைப்பு உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது என்றார்.
சீனாவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட அதிபர் புதின், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் சக்திகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவும், பிரிக்ஸ் அமைப்பு ஆணித்தரமாக செயல்படும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் சீர்திருத்தத்தை ஆதரிப்பதாக கூறி புதின், மனித குல முன்னேற்றத்திற்கு இது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.