அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்த காட்சிகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகிறது. தொடர்ந்து காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்த வீடியோவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டார்.
அதில் அப்பாவி மக்கள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து பேசிய அவர், இந்த காட்சிகள் உண்மையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் அக்டோபர் 7-ஐ நினைவில் வைத்திருப்பதாகவும், இஸ்ரேலிய பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வர உறுதியுடன் இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.