மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

Murugesan M by Murugesan M
Aug 31, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறவுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரிவிதித்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இரண்டுநாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார்  பிரதமர் நரேந்திர மோடி.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்மூலம் தேச நலனில் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லை என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் பிரதமர் மோடி உணர்த்தியிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பயணத்தால் இந்தியாவுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. பில்லியன் கணக்கான டாலர் மதிப்புடைய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளன.

தொழில்நுட்பம், அரிய வகைக் கனிமங்கள், விண்வெளி ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் திறன்மிகு இந்தியர்களைப் பணிக்காக ஜப்பானுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் ஜப்பானில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இவைத் தவிர அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ராணுவம் உள்ளிட்ட 8 முக்கியத் துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் சந்திரயான் திட்டத்தில் ஜப்பானும் இணைந்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் 5’ என்ற PROJECT-ஐ செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

அதற்காக இந்தியா தயாரித்துள்ள LUNAR LANDER-ஐ ஜப்பானின் H 3 – 24 L ராக்கெட் சுமந்து செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாடு தயாரித்துள்ள LUNAR ROVER-ம் உடன் அனுப்பப்படவுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் 5 புள்ளி 96 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டிருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகம் மூலம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இங்கு முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பெற்றுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

இந்தியா நம்மை மட்டுமே நம்பியில்லை என்பதை இனியாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புரிந்துகொள்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: Modi's diplomacy: Japan to invest Rs. 6 lakh crore in Indiaமோடியின் ராஜதந்திரம்முதலீடு செய்யும் ஜப்பான்jappanpm modi newspm modi visit jappan
Share
Tweet
SendShare
Previous Post

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்சி – வெளியியிட்டார் இஸ்ரேல் பிரதமர்!

Next Post

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே இடத்தில் ஒன்று கூடிய முக்கிய தலைவர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies