சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வைகள் குறித்து மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை மோடி சந்திக்கவுள்ளார்.அப்போது, அமெரிக்க வரிவிதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.