சென்னையில் இன்று முதல் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பால், தேயிலை, காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டீ, பால், லெமன் டீ ஆகியவை 15 ரூபாயாகவும், காபி, ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஆகியவை 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், பார்சல் வாங்கப்படும் கப் டீ, பால் ஆகியவை 45 ரூபாயாகவும், காபி, ஸ்பெஷல் டீ , ராகி மால்ட் உள்ளிட்டவை 60 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பஜ்ஜி, சமோசா உள்ளிட்டவையின் விலையும் 15 ரூபாயாக அதிகரித்துள்ளது.