புதுச்சேரியில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடை மீது தமிழ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
புதுச்சேரியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டுமென அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோரிமேடு பகுதியில் அரசு நிறுவனமான அமுதசுரபி மருந்தகத்தின் பெயர்பலகை தமிழில் வைக்கப்படவில்லை.
எனவே, அங்கு சென்ற தமிழ் உரிமை இயக்கத்தினர் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். மேலும், கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவிட்டால், தாக்குதலில் ஈடுபடுவோம் என மற்ற கடைகளுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.