வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 738 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதந்தோறும் முதல் நாளன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்கின்றன.
அந்த வகையில் செப்டம்பர் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 738 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக சிலண்டரின் விலையில் மாற்றம் இருந்தாலும், வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.