கிருஷ்ணகிரியில் 6 மாத குழந்தையைக் கடத்தி சென்ற பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் ஈஸ்வரி என்ற பெண் தனது 6 மாத குழந்தை மற்றும் உறவினர்களுடன் கூடாரம் அமைத்துத் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட விஜயசாந்தி என்பவர்க் குழந்தைக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து நட்பாகப் பழகி உள்ளார்.
பின்னர் அருகில் இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி குழந்தையை எடுத்துச் சென்ற விஜயசாந்தி வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை, இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓசூரில் வைத்து அவரைக் கைது செய்து குழந்தையை மீட்டனர்.