விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சிந்தாமணி பகுதியை சேர்ந்த தனுஷ், விவேக், பிரபாகரன் ஆகிய மூன்று பேரும் தங்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி உள்ளனர்.
அதற்கான பணத்தை அவர்கள் பின்னர் தருவதாக கூறியதால் பெட்ரோல் பங்க் ஊழியர் செல்வக்குமாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது செல்வக்குமார் மீது தாக்குதல் நடத்திவிட்டு 3 பேரும் தப்பியோடினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.