கன்னியாகுமரி மாவட்டம், அருமனைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அருமனை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மது அருந்திய இளைஞர் ஒருவர் சாலையில் ரகளைச் செய்துள்ளார்.
பின்னர் சாலையில் அவர்ப் படுத்து உறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையில் மதுக்கடைச் செயல்படுவதால் அடிக்கடி இதுபோன்ற சிரமத்தை எதிர்கொள்வதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.