தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள அன்புமணி மக்கள் மத்தியில் உரையாற்றியவர்,
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் பொருளாதார அளவில் முன்னேற முடியும் என்றும் கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய மாவட்டமாகத் திருவண்ணாமலை உள்ளது என்று அன்புமணி குறிப்பிட்டார்.
திருவண்ணாமலை வளர்ச்சி பெறாததற்கு அமைச்சர் எ.வ.வேலு தான் காரணம் என்றும் விவசாயிகளைச் சிறையில் அடைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலினுக்கும், சமூக நீதிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் என அன்புமணி தெரிவித்தார்.