தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை
Sep 1, 2025, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

Web Desk by Web Desk
Sep 1, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை கிமுக சிதைந்து கொண்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, “the god of hair cutting” என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.

அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, ‘2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது’ என்பதை, “It Begged the United Nations award” – பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

திமுக தலைவர்கள், காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது.

எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Tags: TNPSC தேர்வுDMKtnpscannamalai mk stalinதிமுக ஆட்சிDMK is destroying the government job dreams of Tamil Nadu youth: Annamalai
ShareTweetSendShare
Previous Post

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Next Post

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

Related News

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி : ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி ரூ.206 கோடி மோசடி!

லீக்ஸ் கோப்பை  கால்பந்து இறுதி போட்டி : சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த இண்டர் மியாமி அணி!

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

ஆப்கானிஸ்தானில் 8 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்!

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies