உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் அருகே அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய லாரியைப் போலீசார் விரட்டி பிடித்தனர்.
மிர்சாபூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தம்பதியினர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து லாரியை நிறுத்தாத ஓட்டுநர் அங்கிருந்து தப்ப முயன்றார். இதைக்கண்ட அப்பகுதியினர் லாரியைப் பின் தொடர்ந்து சென்றனர்.
ஆனால் லாரியை நிறுத்ததாமல் ஓட்டுநர் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
நீண்ட போராட்டத்திற்குப் பின் கிராம மக்கள் உதவியுடன் லாரியைப் பிடித்த போலீசார் ஓட்டுநரைக் கைது செய்தனர்.