ஆழியார் அணையின் காட்சி முனையம் மூடப்பட்டது சுற்றுலா பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறைச் செல்லும் வழியில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் ஆழியார் அணைக் காட்சி முனையம் உள்ளது. அதன் நுழைவாயில் முன்பு நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டதால், காட்சி முனையத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் சில சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு அரணைத் தாண்டிச் சென்று காட்சி முனைத்தைப் பார்த்து வந்தனர். இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக வனத்துறையினர்க் காட்சி முனையத்தின் வாயிலைத் தற்போது மூடியுள்ளனர். இதனிடையே, காட்சி முனையத்திற்குச் செல்ல முறையாக வழி அமைத்துத் தர வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.