பசுக்களைக் கொல்லக் கூடாது என நபிகள் நாயகம் கூறியுள்ளதாகப் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் இந்து பண்டிகைகளைப் பக்தியுடன் கொண்டாடும் சல்மான் கான் குடும்பத்தினர், விநாயகர் சதுர்த்தியையும் கொண்டாடினர்.
இந்நிலையில், சல்மான் கான் அளித்த நேர்காணல் ஒன்றில், தங்கள் வீட்டில் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு பசுவின் பால் தாயின் பாலுக்கு மாற்றானது என்றும், பசுக்களைக் கொல்லக்கூடாது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதாகவும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்.