மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே பெய்த கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழைக் கொட்டித் தீர்த்தது. அதேபோல் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தொடர்ந்து வெள்ளம் வடியாததால் மக்கள் வெளியே செல்லக் கட்டுமரங்களை பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.