திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பள்ளிக்குச் சென்ற மாணவனைக் கடத்த முயன்ற வடமாநில நபரை மக்கள் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
மயிலாடும்பாறைப் பகுதியை சேர்ந்த சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது சிறுவனைப் பின் தொடர்ந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்ச் சிறுவனை கடத்த முயன்றுள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து அந்த வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.