ஜம்மு – காஷ்மிர் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.
உதம்பூர் மாவட்டம், சாமோலி பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பண்டி பாலம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
ஜம்மு காஷ்மிரில் கடந்த வாரம் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாகப் பலத்த மழைப் பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதி மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது.