மதிமுகவின் வளர்ச்சிக்காக துரை வைகோ ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டு இருப்பாரா? என மல்லை சத்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கைக் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வைகோவுக்கு மல்லை சத்யா பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், தீர்ப்பை முன்பே எழுதி வைத்துவிட்டுப் போலியான விசாரணை நடத்தும் சர்வாதிகார சிந்தனை கொண்டவர் வைகோ என மல்லைச் சத்யா குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், ஊரை ஏமாற்ற போலியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உட்கட்சி ஜனநாயகத்தை வைகோ படுகொலைச் செய்துவிட்டதாகவும் மல்லைச் சத்யா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
வைகோவால் கட்டுப்படுத்த முடியாதவராகத் துரை வைகோ திகழ்வதாக விமர்சித்துள்ள மல்லைச் சத்யா மதிமுகவின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பையாவது துரை வைகோ கிள்ளி போட்டு இருப்பாரா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது துரை வைகோவுக்காக ஒரு வழிப்பாதையாக மாறிவிட்டதா? எனவும் மல்லை சத்யா அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.