சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர், தியான்ஜின் வந்ததாகக் கூறப்படுகிறது.
சீன அதிகாரிகள் உடனான இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஷெரீப் உடன் அசிம் முனிர் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் சீனாவின் ராணுவ அணிவகுப்பு தினத்தில் அசிம் முனிர் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.