மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில், குறைகளை நிவர்த்தி செய்து குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, முறையாக விசாரணை நடத்தி ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதின்ற மதுரை அமர்வு கெடு விதித்திருந்தது.
அதன்படி குறிப்பிட்ட தேதியில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் குற்றப்பத்திரிகையில் பல்வேறு குறைகள் இருப்பதாகக்கூறி அதனை திருப்பி அனுப்பிய மாவட்ட நீதிமன்றம், குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.