திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான 590 கிலோ கஞ்சாவை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டியில் கடந்த 31ஆம் தேதி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான 590 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதன், வினோத், அலெக்ஸ் பாண்டி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.