மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா கணபதி பந்தலில் பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி லால்பாக்சா கணபதி பந்தலில் நேற்று சந்தியா ஆரத்தி நடைபெற்றது.
இதில் பாலிவுட் நடிகர் அனில் கபூர், தனது மனைவியுடன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.