ஜம்முவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.