மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 30, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 2, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக இளைஞர்களின் ஆதரவை அறுவடை செய்யும் நோக்கில், தமிழகக் கல்லூரிகளில் பயில்வதற்காக வங்கிக் கடன் பெற்ற 30 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களின் கல்விக்கடனையும் அரசே திருப்பி செலுத்தும் என வாக்குறுதி எண் 159 இல் தெரிவித்த அறிவாலயம்  ஆட்சி அமைத்தவுடன் அதை அப்படியே கமுக்கமாக மூடி மறைத்துவிட்டது.

தங்களை நம்பி வாக்களித்த மாணவர்களையும் இளைஞர்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும், மறு கண்ணிற்கு சுண்ணாம்பும் வைப்பது போல, தங்களது புதல்வர்களின் இளமைக் காலத்திலேயே அவர்களுக்கு அனைத்து அதிகாரமும், பேரும், புகழும் கிடைத்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படும் திமுக தலைவர்கள், தமிழக இளைஞர்களைத் தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொடுத்த வாக்குறுதியின் படி லட்சக்கணக்கான அரசு காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், கல்விக் கடனையும் ரத்து செய்யாமல், அரசுக் கல்லூரிகளையும் முறையாகப் பராமரிக்காமல் வதைக்குமளவிற்கு தமிழக இளைஞர்கள் மீது திமுகவிற்கு அப்படியென்ன வன்மம்?

ஓட்டுக்காக படித்த பட்டதாரிகளையே இப்படி கூசாமல் ஏமாற்றும் திமுக, படிக்காத பாமர மக்களை என்னவெல்லாம் கூறி, மடைமாற்றி தங்களின் மாயைக்குள் சிக்க வைத்திருக்கும்? இவ்வாறு, வெறும் பொய் பித்தலாட்டங்களால் கட்டமைக்கப்பட்ட திமுக எனும் கட்சி தமிழகம் எனும் புனித பூமியை ஆளலாமா? அதை நாம் அனுமதிக்கலாமா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags: Chief Minister StalinTamil Nadu BJP state president Nainar Nagendranstudent loans issue
Share
Tweet
SendShare
Previous Post

உ.பி.யில் தொடர் மழை – யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி செல்லும் வெள்ளநீர்!

Next Post

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!

Related News

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies