கச்சத்தீவை எந்த காரணம் கொண்டும் விட்டுத்தரப் போவதில்லை என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அங்குள்ள மயிலிட்டி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அவர், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், திடீரென யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறையில் இருந்து நான்கு ரோந்து படகுகளுடன் கச்சத்தீவுக்கு சென்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, கச்சத்தீவை சுற்றிப் பார்த்தஅவர், அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், மீனவர்களிடையே பேசிய அவர், நம் மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணியமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.