தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற லோகா திரைப்படம், வெளியான 4 நாட்களில் 60 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன் உள்ளிட்டோர் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான லோகா திரைப்படம், வெளியானது முதலே ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மலையாளச் சினிமாவில் தொடக்கத்திலேயே அதிக வசூலை ஈட்டிய லோகா, தற்போது மிக வேகமாக அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்கள் பட்டியலிலும் சேர்ந்துள்ளது.